பிரித்தானியா போருக்கு தயாராகவேண்டும் என்று கூறும் பிரதமர்: ஆனால்...
பிரித்தானியா போருக்கு தயாராகவேண்டும் என்று கூறுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். ஆனால், அதற்காக எந்த திட்டமும் தீட்டப்படுவதற்கான அறிகுறியையே காணோம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
தயாராகாத பிரித்தானியா
2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரீமியாவைக் கைப்பற்றியபோதும் சரி, 2022இல் உக்ரைனை ஊடுருவியபோதும் சரி, முந்தைய பிரதமர்கள் யாருமே பிரித்தானியா போருக்குத் தயாராகவேண்டும் என்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

Credit : UK MoD
ரஷ்யா உக்ரைனை ஊடுருவி தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்ற லேபர் அரசும் பிரித்தானியாவை போருக்குத் தயார் செய்வதற்கு உருப்படியாக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Credit : kings college london
விமானப்படைத் தளபதியான Air Chief Marshal Sir Richard Knighton நேற்று இது குறித்துப்பேசும்போது, பிரித்தானியா இப்படி ஒரு மோசமான நிலையை அடைவதற்குக் காரணம், அடுத்தடுத்து பிரித்தானியாவை ஆண்ட அரசுகள் எதுவுமே பாதுகாப்பு மீது கவனம் செலுத்தாமல் அரசு உதவிகள், சுகாதாரம் போன்ற விடயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்திவந்ததுதான் என்று கூறியுள்ளார்.
ஆக, பிரித்தானியா போருக்கு தயாராகவேண்டும் என்று கூறி வருகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். ஆனால், அரசு தரப்பில் அதற்காக எந்த திட்டமும் தீட்டப்படுவதற்கான அறிகுறியையே காணவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |