ஒத்த ஓட்டு வாங்கிய பாமக வேட்பாளர்.., எந்த தொகுதியில் அரங்கேறியது?
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாமக வேட்பாளரை பற்றி பார்க்கலாம்.
காஞ்சிபுரம் தொகுதி நிலவரம்?
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர , பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 134 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி ஒன்பதாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் க. செல்வம் 231600 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 144107 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் 65134 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 45335 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஒரு ஓட்டு
இந்நிலையில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்பதாவது சுற்றில் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் 122 வது பூத்தில் வெறும் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.
இந்த பூத்தில் திமுக வேட்பாளர் செல்வம் 520 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 219 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார் 54 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |