பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஆண் என கூறப்படும் விவகாரம்: சவால் விடும் பெண்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் ஆணாகப் பிறந்தவர் என அவ்வப்போது இணையத்தில் வதந்திகள் பரவுவதுண்டு.
சமீபத்தில் அப்படி வதந்தி பரப்பிய பெண்கள் இருவரை ஏற்கனவே மேக்ரான் தம்பதியர் பிரான்சில் நீதிமன்றத்துக்கு இழுத்துள்ளார்கள்.
சவால் விடும் பெண்
இந்நிலையில், பிரிஜிட் ஆணாகப் பிறந்தவர் என கூறிவரும் அமெரிக்க சமூக ஊடகப் பிரபலமான கேண்டேஸ் ஓவன்ஸ் (Candace Owens) என்னும் பெண் மீது மேக்ரான் தம்பதியர் அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தன்னை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து, மேக்ரானின் மனைவி பிரிஜிட்டைக் குறித்து விமர்சிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார் கேண்டேஸ்.
ஆனாலும், கேன்டேஸ் தன் நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமும் மாறியதுபோல் தெரியவில்லை.
ஆம், நேற்று மீண்டும் தனது பாட்காஸ்டில் பேசிய கேண்டேஸ், மேக்ரான் தம்பதியர் நீதிமன்றங்களை தங்கள் வழிக்குக் கொண்டுவர முயல்வதாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், நேற்று மீண்டும் மேக்ரானுடைய மனைவி பிரிஜிட்டை ஆண் என விமர்சித்த கேன்டேஸ், தனக்கெதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு முட்டாள்தனமானது என்றும், பேரழிவுக்கு வழிவகுக்கும் மக்கள் தொடர்பு யுக்தி என்றும் விமர்சித்துள்ளார்.
அத்துடன், முழு உலக மக்கள் சார்பாகவும் நான் உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என்றும் மேக்ரான் தம்பதியருக்கு சவாலும் விட்டுள்ளார் கேண்டேஸ்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |