சுருண்டு விழுந்து பலியான பலர்... 70கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில்: வெளிவரும் பகீர் சம்பவம்
அர்ஜென்டினாவில் கலப்பு கோகோயின் பயன்படுத்தியதன் காரணமாக ஒரே நாளில் 20 பேர்கள் பலியானதுடன் 74 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த போதை பொருள் வினியோகம் செய்தவர்களை தற்போது பொலிசார் தேடி வருகின்றனர். மேலும், சமீபத்தில் வாங்கப்பட்ட போதை பொருள் மக்கள் தங்கள் கைவசம் வைத்திருந்தால், கண்டிப்பாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என பிராந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரையான நடவடிக்கையின் மூலம் 10 பேர் கைதாகியுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 200 பொட்டலம் கஞ்சா மற்றும் 400 பொட்டலம் கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
போதை பொருள் கும்பல்களுக்கிடையேயான மோதல் காரணமாகவே விலை மலிவான கலப்பு கோகோயின் புழக்கத்திற்கு விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், விலை மலிவான போதை பொருள் பயன்படுத்திக்கொண்ட மக்கள், மருத்துவமனை, தெருக்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளில் சுருண்டு விழுந்து பலியானதாக தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை ஒரே நாளில், தலைநகர் பியூனஸ் அயர்ஸ் உள்ள பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக வெளியான தகவலில் 56 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதில் 26 பேர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் 20 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மொத்தம் 74 பேர்கள் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மருத்துவமனையை நாடிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.