பில்லியன் டொலர் மதிப்புள்ள புதையல் - ஹிட்லரின் தங்க ரயில் தேடலில் திருப்புமுனை
ஹிட்லரின் தங்க ரயில் தேடலில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
ஹிட்லரின் தங்க ரயில்
இரண்டாம் உலகப்போரின் போது நாஜிப்படைகள் பல்வேறு நாடுகளில் கைப்பற்றிய தங்கம், வைரம் உட்பட செல்வங்களை பாதுகாக்க நினைத்தார். இந்த செல்வங்கள் அனைத்தும் பெட்டி பெட்டியாக ரயில் ஒன்றில் ஏற்றப்பட்டன.
ஔல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஹிட்லர் அமைத்துக்கொண்டிருந்த ரகசிய பாதாள நகரத்தின் பெயர் Project Riese. அங்கே ஓரிடத்தின் ரகசியச் சுரங்கப் பகுதியில் தங்க ரயிலை மறைத்து வைக்கலாம் என்பது நாஜிக்களின் திட்டம்.
பிரெஸ்லா என்ற நகரத்திலிருந்து (இன்றைய போலந்தின் Wroclaw நகரம்) தங்க ரயில் புறப்பட்டது. சில மைல் தூரம் பயணம் செய்து ஔல் மலைப்பகுதியை அடைந்தது. அங்கே Walbrzych நகரத்தின் வெளியே அமைந்த ரகசியக் குகை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதில் உள்ள செல்வத்தின் இன்றைய மதிப்பு 20 பில்லியன் யூரோ இருக்கும் என நம்பப்படுகிறது.
தற்போது Walbrzych நகரம் போலந்தில் உள்ளது. போலந்து அரசு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என பலரும் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தங்க ரயிலை தேடி வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் காலத்தை சேர்ந்த போலந்தின் கோபெர் மற்றும் ஜெர்மனியின் ரிட்செர், "எங்களுக்கு நாஜி தங்க ரயில் இருக்குமிடம் தெரியும். எங்கள் காலம் முடிவதற்கு முன்பாகவே அதைக் கண்டுபிடித்துக் கொடுக்க விரும்புகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.
கண்டுபிடித்துக் கொடுத்தால், கிடைக்கும் செல்வத்தில் 10% தங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
Wroclaw – Walbryzch நகரங்களுக்கு இடைப்பட்ட பழைய ரயில் பாதையில் 65வது கிலோமீட்டரில் நாஜி தங்க ரயில் புதைக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் துப்புக் கொடுக்க, 2018 ஆம் ஆண்டு வரை அங்கே தீவிரமான தேடுதல் வேட்டை நடந்தது.
சந்தேகத்துக்குரிய குகைகள், பழைய ரயில் தண்டவாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், நாஜி தங்க ரயில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தேடலுக்கு அனுமதி
இந்நிலையில், க்டான்ஸ்கில் உள்ள நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதற்கான மாகாண அலுவலகம், தங்க ரயிலை தேடுவதற்கு துளையிடுதல் மற்றும் தொல்பொருள் ஆய்வுகளுக்கு போலந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து பேசிய பொமரேனியன் வோய்வோட்ஷிப் நினைவுச்சின்னப் பாதுகாவலரின் செய்தித் தொடர்பாளர் மார்சின் டைமின்ஸ்கி, "தேடல் பகுதியில் ஒரு ஜெர்மன் வைப்புத்தொகை அமைந்திருக்கலாம் என்று கூறினார். சிலர் அது தொலைந்து போன ஆம்பர் அறையாகக் கூட இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
18 ஆம் நூற்றாண்டில் ரஷ்ய மன்னர் முதலாம் பீட்டருக்கு பரிசாக வழங்கிய ஆம்பர் அறை , இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு கோனிக்ஸ்பெர்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
1944 க்குப் பிறகு அது என்ன ஆனதென்று தெரியவில்லை, இதனால் அந்த அறை வரலாற்றின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக மாறியுள்ளது. டிசீமியானியில் தற்போதைய தேடல், கடந்த கால ரகசியங்களை வெளிக்கொணரும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |