எதிரி நாட்டில் இருந்து வெளியேறுங்கள்... குடிமக்களுக்கு போலந்து கோரிக்கை
போலந்து தனது குடிமக்கள் அனைவரும் அண்டை நாடான பெலாரஸை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தியோகப்பூர்வமாக கோரியுள்ளது.
போலந்து மக்கள்
போலந்து அரசாங்கத்தின் இணைய பக்கத்தில் குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்த பதட்டங்கள், பிராந்தியத்தில் நடந்து வரும் போர் மற்றும் போலந்து குடிமக்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது உள்ளிட்ட காரணங்களால்,
பெலாரஸ் குடியரசிற்கான எந்த ஒரு பயணத்தையும் போலந்து மக்கள் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்துகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெலாரஸ் குடியரசுடன் எல்லைக் கடக்கும் இடங்களில் பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் அல்லது எல்லைப் போக்குவரத்தை நிறுத்தி வைத்தல் போன்ற கடுமையான நெருக்கடி ஏற்பட்டால், அல்லது எதிர்பாராத பிற சூழ்நிலைகளில்,
வெளியேற்றம் கணிசமாகக் கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ கூட இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெலாரஸில் எஞ்சியுள்ள போலந்து குடிமக்கள் கிடைக்கக்கூடிய வணிக மற்றும் தனியார் வழிமுறைகள் மூலம் உடனடியாக வெளியேறுமாறும் பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய தூதர்
தற்போது, போலந்துடனான பயணிகள் போக்குவரத்திற்கு டெரெஸ்போல்-பிரெஸ்ட் எல்லைக் கடவை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மேலும், போலந்து குடிமக்கள் எந்த வகையான மருந்துகளும் பெலாரஸ் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேட்டோ எல்லைக்குள் நுழையும் எந்தவொரு ரஷ்ய விமானங்களையும் தாக்குவதைத் தவிர்க்குமாறு பிரான்சுக்கான ரஷ்ய தூதர் நேட்டோவிடம் குறிப்பிட்ட 24 மணி நேரத்தில் போலந்து தமது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவது போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |