ரஷ்யாவுக்கு பயந்து ரூ 21,000 கோடியில் பாதுகாப்பு அரண் அமைக்கும் ஐரோப்பிய நாடு
ரஷ்ய அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் கோடிகள் செலவிட்டு எல்லை முழுவதும் பாதுகாப்பு அரண் அமைத்து வருகிறது ஐரோப்பிய நாடு ஒன்று.
ரூ 21,000 கோடி
இராணுவ டாங்கிகள் உள்ளே நுழையாமல் இருக்க தடுப்புகள், அதி நவீன கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அகழிகளை ரஷ்ய எல்லையில் அமைத்துள்ளது போலந்து நாடு.
கிழக்கு கவசம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு மொத்தம் 2 பில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 21,000 கோடி தொகையை போலந்து நிர்வாகம் செலவிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா கண்டத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய திட்டம் இதுவென்றே கூறுகின்றனர். பெலாரஸுடனான போலந்தின் எல்லைகள் மற்றும் ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் இந்த கிழக்கு கவசம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு கவச கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் டொனால்ட் டஸ்க், இது அமைதிக்கான முதலீடு என குறிப்பிட்டுள்ளார். போலந்து எல்லை எவ்வளவு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அணுகுவது கடினம் என்றார்.
முழு ஐரோப்பாவும்
மட்டுமின்றி Donald Tusk-ன் அரசாங்கம் அடுத்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவிகிதத்தை பாதுகாப்புக்காக செலவிடுவதாக திட்டமிட்டுள்ளது.
போலந்தின் இந்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு தற்போது முழு ஐரோப்பாவும் இந்த முதலீடுகளை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் போலந்து மட்டும் போர் தொடர்பான ஆயத்தத்தில் இல்லை. ஜேர்மனியும் குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க பதுங்கு குழி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |