பிரதமர் உயிருக்கு ஆபத்து - தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் போலந்து பொலிஸ்
Poland PM Donald Tusk Attack Plot Warning: போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் அவசரக் கூட்டம்
போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் வ்லாடிஸ்லாவ் கோசினியாக்-கமிஷ் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகள், பொலிசார் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த கூட்டம் அக்டோபர் 11, 2026 அன்று காலை 11 மணிக்கு (0900 GMT) வார்சாவில் நடைபெற்றது. உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கரோலினா கலேக்கா, “இந்த சூழ்நிலையைப் பற்றி விரிவாக ஆலோசிக்க அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு எதிரான தாக்குதல் திட்டம் குறித்த தகவலின் தன்மை குறித்து பொலிசார் இதுவரை கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், இந்த எச்சரிக்கை நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
போலந்து அரசியல் சூழலில் சமீபத்தில் பல்வேறு பதற்றங்கள் நிலவுகின்றன. இதனால், பிரதமர் டஸ்க் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் மிகுந்த கவலைக்குரியதாகும். அரசின் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு சேவைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மக்கள் பாதுகாப்பும், நாட்டின் நிலைத்தன்மையும் காக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக செயல்படுகிறது.
சந்தேக நபர் கைது
இந்நிலையில், இந்த எச்சரிக்கை தொடர்பாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும், லோயர் சிலேசியா பகுதியில் கைது செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |