தீமையுடனான கொடிய மோதல் இது! ஜெலென்ஸ்கியை சந்தித்த ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை உக்ரைனில் சந்தித்து பேசினார்.
டொனால்டு டஸ்க்
ரஷ்யாவுடனான மோதல் நீடிக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்டு டஸ்க் (Donald Tusk) உக்ரைன் சென்றுள்ளார்.
அங்கு அவர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
@AP Photo/Efrem Lukatsky
இதில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்த அவர், புதிய இராணுவ உதவிப் பொதியை அறிவித்தார். அதில் பாரிய ஆயுதங்களை வாங்குவதற்கான கடன் மற்றும் அவற்றை ஒன்றாக உற்பத்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறியும் அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கும்.
@Gleb Garanich/Reuters
அத்துடன் தானிய ஏற்றுமதி மற்றும் Trucking தொடர்பாக தங்கள் நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஒரு புரிதலை அடைந்ததாக கூறினார்.
பிரச்சனைகளை விரைவில் தீர்ப்போம்
மேலும், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலையும் சந்தித்தார் டொனால்டு டஸ்க். அப்போது மீண்டும் தான் பிரதமரான பிறகு, அவர் சென்ற முதல் வெளிநாட்டு தலைநகரம் கீவ் என்று கூறினார்.
முன்னதாக டஸ்க், 'சில முரண்பாடுகள் உள்ளன, அவற்றை நாங்கள் நன்கு அறிவோம், அவற்றைப் பற்றி பேசுவோம். ஆனால், நட்பின் உணர்வில் மட்டுமல்ல, வெளிப்படையாக. ஆனால் இந்த அணுகுமுறையைக் கொண்டு பிரச்சனைகளை விரைவில் தீர்ப்போம், அவர்களை தக்கவைக்கவோ அல்லது பெருக்கவோ அல்ல' என தெரிவித்தார்.
அவர் எக்ஸ் பக்கத்தில், 'தீமையுடன் உக்ரைன் புரியும் இந்தப் போரில், போலந்து மிகவும் நம்பகமான மற்றும் நிலையான நட்பு நாடு என்ற உணர்வை உருவாக்குவது மிகவும் முக்கியம்' எனவும் அவர் கூறினார்.
@AP Photo/Efrem Lukatsky
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |