இந்த நாடுகளை தாக்கினால் நாங்கள் களமிறங்குவோம்! ரஷ்யாவுக்கு பிரபல ஐரோப்பிய நாடு எச்சரிக்கை
ஸ்வீடன், பின்லாந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டால் போலாந்து அவர்களுக்கு உதவும் என்று அந்நாட்டு பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி தெரிவித்துள்ளார்.
அதாவது, நேட்டோ உறுப்புரிமையைப் பெறுவதற்கு முன்பு அவர்கள் தாக்கப்பட்டால், ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு போலந்து உதவும் என்று பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி தெரிவித்துள்ளார்.
சுவீடன் மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைவது ஐரோப்பாவில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக நான் கருதுகிறேன்.
நேட்டோவில் சேருவதற்கான நடைமுறை காலத்தில் ஸ்வீடன் அல்லது பின்லாந்து மீது தாக்குதல் நடந்தால், போலந்து அவர்களின் உதவிக்கு வரும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறினார்.
எமன் வாயிலிருந்து மகன் பேரறிவாளனை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார் அற்புதம்மாள்! வைகோ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து பின்லாந்து மற்றும் ஸ்வீடன் புதன்கிழமை நேட்டோ கூட்டணியில் சேர முறைப்படி விண்ணப்பித்துள்ளன. சேர்க்கை நடைமுறைக்கு ஒரு சில வாரங்கள் மட்டுமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.