ரஷ்யாவால் அதிகரிக்கும் பதட்டம்..உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப பிரபல ஐரோப்பிய நாடு முடிவு!
உக்ரைனுக்கு மனிதர்கள் கொண்டு செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள் (MANPADS) மற்றும் ட்ரோன்களை போலந்து வழங்கும் என்று அந்நாட்டு பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எல்லைக்கு அருகே ரஷ்ய அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
அதுமட்டுமின்றி, அமெரிக்க, பிரித்தானியா நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன.
இதற்கிடையில், திங்களன்று, உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்க போலந்து முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பணியகத்தின் தலைவரான Pawel Soloch அறிவித்தார்.
ஆனால், என்ன ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போலாந்து பிரதமர் Mateusz Morawiecki, உக்ரைனுக்கு தற்காப்புக்காக பயன்படுத்தப்படும், மனிதர்கள் கொண்டு செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள் (MANPADS) மற்றும் ட்ரோன்களை போலந்து வழங்கும் என தெரிவித்துள்ளார்.