15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு
போலந்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 42 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார்.
30 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்
போலந்து நாட்டில் ஸ்வீட்டோகுளோவிஸ்(Świętochłowice) பகுதியில் சுமார் 3 தசாப்தங்களாக வீட்டின் அறையினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 42 வயது மிரெலா(Mirela) என்ற பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கடைசியாக 1998ம் ஆண்டு அவருடைய 15 வயதில் பொதுவெளியில் இருந்துள்ளார்.
அதற்கு பின், சிறிய கட்டில் விளையாட்டு பொம்மைகள் மற்றும் பூ வடிவ மேசை இருந்த குழந்தையின் அறையில் மிரெலா அடைக்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு குறித்து ஜூலை மாதம் எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க சென்ற பொலிஸார் இந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடக்க கூட முடியாத நிலையில் பெண்
பொலிஸார் முதலில் மிரெலா-வை பார்த்த போது மிகவும் மெலிந்த ஊட்டச்சத்து குறைந்த மோசமான உடல் நிலையுடன் நடக்கவோ நிற்கவோ கூட முடியாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மிரெலா தற்போது உடல் மற்றும் மனரீதியான தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில காலங்கள் கழித்து மிரெலா மீட்கப்பட்டு இருந்தால் அவரது உயிரை கூட காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் முரண்பட்ட கருத்து
இந்த சம்பவம் தொடர்பாக மிரெலாவின் பெற்றோரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் குழப்பமான மற்றும் முரண்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தங்கள் அவ்வப்போது வெளியே தோட்டத்திற்கு சென்று நண்பர்களை சந்தித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் மிரெலா-வின் அண்டை வீட்டார், மிரெலா பல ஆண்டுகளுக்கு முன்னரே வீட்டை விட்டு சென்று விட்டதாக நம்பி இருந்துள்ளனர்.
மிரெலா பல மாதங்களுக்கு முன்பே மீட்கப்பட்டு இருந்தாலும், மிரெலாவின் மருத்துவ சிகிச்சைக்கான தேவைகளுக்கு மக்கள் ஆதரவு வழங்க திரண்ட போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, மேலும் சமூக நிதி திரட்டும் அமைப்பாளர் ஒருவர் இந்த சம்பவத்தை தன்னுடைய சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |