பொதுமக்களுடன் சேர்ந்து பொருட்களை சூறையாடும் பொலிசார்... தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடும் வன்முறை
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் கைதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். பல இடங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதுடன், 72 பேர் வரை கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், குழப்பங்களை சாதகமாக்கிக்கொண்ட ஒரு கும்பல் பல்பொருள் அங்காடிகளை சூறையாடி வருகிறது. அதில் பொலிசார் ஒருவரே அங்காடி ஒன்றிலிருந்து ரொட்டி, பால் மற்றும் சமையல் எண்ணெய் முதலான பொருட்களை திருடி தனது காரில் மறைத்துவைத்திருக்கும் காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது
அந்த காட்சியை தனது மொபைலில் வீடியோ எடுக்கும் பெண் ஒருவர், இவர் ஒரு பொலிஸ் அதிகாரி, அதுவும் சீருடையில் இருக்கும் அதிகாரி, இதுதான் தென்னாப்பிரிக்க பொலிசார் மக்களே என்று கூறுவதையும், அந்த பொலிசார் திரு திருவென விழிப்பதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.
தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதியான Jacob Zuma ஊழல் வழக்கில் கைதாகி, அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.