பொலிஸ் அதிகாரியை பொது இடத்தில் மண்டியிட வைத்து துடி துடிக்க கொன்ற தலிபான்கள்! பதற வைக்கும் காட்சி
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசாங்க அதிகாரிகளை ஒவ்வொருவர்களாக தலிபான்கள் தீர்த்துக்கட்டி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, ஆப்கானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், கல்வி கற்கலாம், வேலைக்குச் செல்லலாம்.
அமெரிக்க,மேற்கத்தியப் படைகளுடன் இணைந்து எங்களை எதிர்த்த மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என தலிபான் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதேசமயம், நாடு முழுவதும் ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடியை அகற்றிய தலிபான்கள், அவர்களின் வெள்ளை கொடியை ஏற்றினர்.
ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடிக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், Badghis மாகாணத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி Haji Mullah-வை பொதுயிடத்தில் வைத்து தலிபான்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்....
குறித்த வீடியோவில், கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் Haji Mullah-வை மண்டியிட வைத்து சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளனர்.
தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த Haji Mullah, சில தினங்களுக்கு முன் போராளிகளிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
Haji Mullah படுகொலை ஆப்கானில் உள்ள ஒவ்வொரு முன்னாள் அரசு அதிகாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.