அவமானப்படுத்தியதால் வேலையை விட்ட Police Constable., இப்போது UPSC தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்தியதால் வேலையை ராஜினாமா செய்த போலீஸ் கான்ஸ்டபிள் யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2023 -ம் ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு (Civil Service Examination) முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் இந்தியா 1,016 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த தேர்வில் தன்னை அவமானப்படுத்தியதால் வேலையை விட்ட Police Constable உதய் கிருஷ்ணா UPSC தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் 780 -வது இடம் பிடித்துள்ளார்.
UPSC தேர்வில் வெற்றி
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உதய் கிருஷ்ணா ரெட்டி (Uday Krishna Reddy). இவர், சாதாரண அரசுப் பள்ளியில் தெலுங்கு வழியில் படித்தவர்.
இவருக்கு காவல்துறையில் வேலை கிடைத்து கடந்த 2013 -ம் ஆண்டில் இருந்து 2018 -ம் ஆண்டு வரையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார்.
அப்போது, சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் இவர் மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பு காரணமாக 60 பொலிஸ் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா அன்றைய தினமே வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய முயற்சிப்பேன்" என்றார்.
இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |