லண்டனில் செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க புதிய யுக்தி
லண்டனில் காவல்துறையினர் ட்ரோன்கள், Sur-Ron மின்-மோட்டார் சைக்கிள்களை செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க பயன்படுத்துகிறது.
செல்போன் திருட்டு சம்பவங்கள்
பிரித்தானியாவில் ஏப்ரல் மாதம் வரையிலான கடந்த 12 மாதங்களில், செல்போன் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 13,000 அளவிற்கு குறைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதிவேக செல்போன் திருட்டுகளில் ஈடுபடுவதற்காக 13 வயது சிறுவர்கள் உட்பட, பல குழந்தைகள் பெரும்பாலும், சேர்க்கப்படுவதாகவும், அவர்கள் பறித்த ஒவ்வொரு செல்போனுக்கு 200 பவுண்டுகள் வரை பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க காவல்துறையினர் புதிய யுக்தியை கொண்டு வந்துள்ளனர்.

அதாவது, ட்ரோன்கள் மற்றும் Sur-Ron மின்-மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர்.
சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள்
கடந்த ஓர் ஆண்டில் செல்போன் திருட்டுகளை கடுமையாக கட்டுப்படுத்த காவல்துறை கையாண்ட வழிமுறைகளில், ட்ரோன்களும் அதிவேக மின்-மோட்டார் சைக்கிள்களும் சிலவாகும்.
'Operartion Catchclaw'-வின் ஒரு பகுதியாக சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிறப்பு இடைமறிப்புக் குழுக்களால் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இந்த இளைஞர்களை மறுவாழ்வு பெற செய்வதற்கும், இந்த வாழ்க்கை முறையில் இருந்து அவர்களை விலக்கி, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க உதவுவதற்கும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |