VAO மகன்.. 40 மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்து சாதனை: யார் இந்த டிஐஜி விஜயகுமார்?
கோவை டி.ஐ.ஜி விஜயகுமாரின் தற்கொலை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த விஜயகுமார்?
கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது தந்தை VAO ஆக பணியாற்றியவர் ஆவார். குரூப் 1 தேர்வு எழுதிய விஜயகுமார், அதில் வெற்றி பெற்று 2003ஆம் ஆண்டில் DSP ஆக பணியில் சேர்ந்தார்.
அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் UPSC தேர்வில் வெற்றி பெற்ற அவர் IPS ஆக தேர்வானார். காவல் கண்காணிப்பாளராக காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய விஜயகுமார், பின் சி.பி. சி.ஐ.டியாக எஸ்.பியாக பணியாற்றினார்.
அப்போது TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குற்றவாளிகளை விசாரணை மேற்கொண்டு கைது செய்தார் விஜயகுமார்.
40 மணிநேரத்தில் கொள்ளையர்கள் கைது
சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்தபோது, அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணிநேரத்திற்குள் கைது செய்தது காவல்துறை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2023 சனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னரே அவர் கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தார்.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகுமார், தனது பணிக்காலத்தில் நற்பெயரைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |