பிரதமர் அலுவலகத்திலேயே தன்னைத் தானே சுட்டுக்கொண்டு காவலர் மரணம்!
ஜப்பானில் பிரதமர் அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூரில் ஒரு வாரகால சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில், பொலிஸ் அதிகாரி யுடா குரோகாவா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார்.
(Tetsuro Takehana)
இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்ட பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
உயிரிழந்த நபர் 25 வயதான யுடா, பெருநகர காவல் துறையின் கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
தற்கொலை செய்துகொண்ட அதிகாரி
குறித்த அதிகாரியின் சடலத்திற்கு அருகே தரையில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் துப்பாக்கியில் இருந்து ஒரு தோட்டா வெளியேறி இருந்தது.
இது தற்கொலை என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறும்போது, யுடா குரோகாவா என்ற அந்த அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிகிறது என கூறியுள்ளனர்.
Tokyo Yomiuri Shimbun file photo