புதிதாக பிறந்த குழந்தை உட்பட பலரை தாக்கிய வெறிபிடித்த குரங்கு., தேடிவரும் பொலிஸ்..
ஜப்பானில் கடந்த பதினைந்து நாட்களில் 10 பேரை தாக்கிய காட்டு குரங்கை பொலிஸார் வலைவீசி தெரிவருகின்றனர்.
ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் தென்மேற்கில் உள்ள ஓகோரி பகுதியில் ஜூலை 8 அன்று குரங்கின் தாக்குதல்கள் தொடங்கியது. மிக மோசமான ஒரு சம்பவத்தில், அந்த குரங்கு ஒரு குடியிருப்பில் புகுந்து புதிதாகப் பிறந்த குழந்தையை கடுமையாக கீறியது.
தகவல்களின்படி, அந்த குரங்கு கடந்த வார இறுதியில் முதல் மாடியில் இருக்கும் குடியிருப்பின் கதவை திறந்து நான்கு வயது சிறுமியின் கால்களை கீறியது. மேலும், அருகில் நபர்களையும் தாக்கியது.
40-50 செமீ உயரமுள்ள குரங்கு அருகில் உள்ள மழலையர் பள்ளி வகுப்பிற்குள் புகுந்து நான்கு வயது சிறுமியை கீறியது. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த குரங்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அப்பகுதியில் மக்கள் தங்கள் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் விலங்குகளுக்கு பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் நகர மேயர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது.
மே மாதம் முதல் இப்பகுதியில் சுமார் 40 குரங்குகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் குரங்குகள் மட்டுமல்லாது, அடிக்கடி கரடி, காட்டுப்பன்றி போன்ற மற்ற சில விலங்குகளும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு ஹிரோஷிமாவில் உள்ள ஒரு பூங்காவில் இரண்டு விலங்குகள் 12 பேரை தாக்கி காயப்படுத்தியதைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டன.