ஜேர்மன் துறைமுகத்தில் மர்ம நபர்கள் செய்த செயல்: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஜேர்மன் துறைமுகம் ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொள்வதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெருமளவிலான போதைப்பொருள் சிக்கியுள்ளது.
அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சனிக்கிழமை மதியம் 1.00 மணியளவில், ஜேர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் மர்ம நபர்கள் இருவர் கப்பல் ஒன்றிலிருந்து எதையோ இறக்குவதை கவனித்த துறைமுக ஊழியர்கள், சுங்க அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளனர்.
அதிகாரிகள் அங்கு விரைந்தபோது, கார் ஒன்றில் இருவர் தப்பிச் செல்ல முயல்வதைக் கண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அவர்களுடைய காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 20 ஸ்போர்ட்ஸ் பைகள் இருந்துள்ளன.
அந்தப் பைகளை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அந்தப் பைகளில் 400 கிலோ அளவுக்கு போதைப்பொருள் ஒன்று இருந்துள்ளது.
காரை ஓட்டிய நபரை அதிகாரிகள் கைது செய்ய, அவருடன் இருந்த மற்ற நபர் தப்பியோடியுள்ளார். ஹெலிகொப்டர் உதவியுடன் அவரையும் கைது செய்த அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |