காரை நிறுத்தாத சாரதியை சுட்டுக்கொன்ற பொலிசார்: பிரான்சில் எழுந்துள்ள சர்ச்சை...
பிரான்சில் வேகமாக வந்த காரை நிறுத்தாத சாரதியை பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சர்ச்சை உருவாகியுள்ளது.
பிரெஞ்சு நகரம் ஒன்றில் காரை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாத சாரதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பிரெஞ்சு நகரமான Niceஇல், கார் ஒன்று ஆபத்தான வகையில் பயணித்ததால், அதை நிறுத்தும்படி அந்த காரின் சாரதிக்கு பொலிசார் ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், அந்த காரின் சாரதி காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த கார் திரும்பி பொலிஸ் கார் ஒன்றின் மீது இருமுறை வேண்டுமென்றே மோதியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
SASHA GOLDSMITH / AP
உடனே பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் காரை நோக்கிச் சுட, சாரதி உயிரிழந்துள்ளார்.
அந்த பொலிசார் தற்காப்புக்காக சுட்டதாக பொலிஸ் யூனியன்கள் தெரிவிக்க, சமூக ஊடகம் ஒன்றில் வெளியான ஒரு வீடியோவிலோ, அந்த கார் நிற்கப்போகும் நேரத்தில் அந்த பொலிசார் அதன் சாரதியை நோக்கிச் சுடுவது போன்ற ஒரு காட்சி பதிவாகியுள்ளது.
ஆகவே, இப்படி பொலிசார் ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
AP Photo/Daniel Cole
இந்த ஆண்டு மட்டும் இத்தகைய சூழலில் 9 பேர் பொலிசாரால் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த சாரதியைக் கொன்ற பொலிசார் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு, இதே Nice நகரில் Bastille Day கொண்டாட்டங்களுக்காக திரளாக கூடியிருந்த மக்கள் மீது ட்ரக் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 86 பேர் கொல்லப்பட்டார்கள், 458 பேர் காயமடைந்தார்கள்.
அந்த வழக்கு விசாரணை, இந்த வாரம்தான் பாரீஸில் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.