நேட்டோ நாடுகளில் ஒன்றைத் தொட்டுப்பார்... ரஷ்யாவுக்கு பகிரங்க சவால் விடுத்த ஐரோப்பிய நாடொன்றின் தளபதி
நேட்டோ நாடுகள் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்தால் St. Petersburg மீது ஏவுகணை தாக்குதலை முன்னெடுப்போம் என போலந்தின் ராணுவ தளபதி ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
ரஷ்யா குறித்து எச்சரிக்கை
இந்த வார தொடக்கத்தில் லிதுவேனியாவின் வில்னியஸில் நடந்த பால்டிக்ஸை பாதுகாத்தல் மாநாட்டில் பேசுகையில், முன்னாள் போலந்து ராணுவ தளபதி Rajmund Andrzejczak உக்ரைனில் ரஷ்ய வெற்றி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க தலைமையிலான இராணுவ முகாமுக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பாக ரஷ்யாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு உக்ரைன் மீதான வெற்றி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
மேலும், போலந்துக்கும் லிதுவேனியாவுக்கும் பேராபத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் போன்று, ஒரு ஊடுருவலை முன்னெடுப்பதை ரஷ்யா கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாகத் தாக்குவோம்
மேலும் லிதுவேனியாவின் ஒரு அங்குலத்தை அவர்கள் தாக்கினாலும், பதில் உடனடியாக வரும் என்றும், தாக்குதல் நடந்த அன்று அல்ல, அடுத்த நிமிடத்திலேயே பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ள அவர், 300 கிமீ சுற்றளவில் தாக்குதல் நடத்துவோம் என்றார்.
அத்துடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை நேரடியாகத் தாக்குவோம் என்றார். மேலும், போலந்து அல்லது பால்டிக் நாடுகள் மீதான தாக்குதல் அதன் முடிவையும் குறிக்கும் என்பதை ரஷ்யா உணர வேண்டும் என்றார்.
போலந்து தற்போது 900 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 800 ஏவுகணைகளை வாங்குகிறது என்றும் அவர் கூறினார். ஆனால், நேட்டோ நாடுகளை தாக்குவது என்பது தமது திட்டமே அல்ல என்றே விளாடிமிர் புடின் தொடர்ந்து கூறி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |