போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி : ஜோ பைடன் என்ன கூறியுள்ளார்?
கத்தோலிக்க மக்களின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசப் பிரச்சினையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ்
இவர் 2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர்.
ஏற்கனவே இருந்த நோய்
86 வயதுடைய இவர் முழங்கால் வலியால் சக்கரை நாட்காலியை தான் சமீபக்காலமாக பயன்படுத்தி வருகின்றார். கடந்த ஆண்டு இவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சையும் நடைப்பெற்றுள்ளது.
ஏன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்?
சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமப்பட்டுள்ளார். ஆகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நுரையீரல் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் என முறையே முக்கிய நிகழ்வுகள் வரவிருப்பதால் இவர் கலந்துக் கொள்வாரா எனும் சந்தேகம் எழும்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் கூறிய விடயம்
போப் பிரான்சிஸ் நலம்பெற்று மீண்டும் வரவேண்டும் என மக்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.