வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்: ஆனால் இது கட்டாயமாம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலம் சீராகி வீடு திரும்பினார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், உடல்நலப்பிரச்சனை காரணமாக கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் போப் திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படத்தை வத்திக்கான் வெளியிட்டது.
இந்த நிலையில், உடல்நிலை சீரானதால் போப் பிரான்சிஸ் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் இயக்குநர் செர்ஜியோ அல்பெய்ரி கூறுகையில்,
"போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து திரும்பினார். எனினும், அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |