'இது தான் என் கடைசிகால ஆசை' போப் பிரான்சிஸ் குறித்து தெரியவந்துள்ள வெளிவராத தகவல்
கடைசிவரை போப் ஆண்டவராகவே இருந்து, ரோம் நகரில் தான் தனது உயிர் போகவேண்டும் என ஆசைப்படுவதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் 84, பற்றிய தகவல்களுடன் சனிக்கிழமை 'The Health of Popes' என்ற புத்தகம் வெளிவந்தது. 2019-ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவின் பிரபல பத்திரிகையாளர் மற்றும் மருத்துவர் Nelson Castro-வுடநானா ஒரு நேர்காணலில் போப் பிரான்சிஸ் தன்னைப் பற்றி விவரித்த தகவல்கள் இந்த புத்தகத்தில் தொகுத்தது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்திலிருந்து சில முக்கிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
அதில், அர்ஜெண்டினாவில் இத்தாலிய குடியேறியவர்களுக்கு மகனாக பிறந்த Jorge Mario Bergoglio (போப் பிரான்சிஸின் இயற்பெயர்), தனது கடைசி காலத்தில் தனது சொந்த நாட்டிற்கு செல்ல ஆசை இல்லை என்று கூறியுள்ளார்.
அர்ஜெண்டினாவில் 67 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டதால், தான் அதை நிச்சயம் மிஸ் பண்ண மாட்டேன் என கூறிய அவர், தனது கடைசிகாலத்தில் போப் ஆண்டவராகவே இருந்து ரோம் நகரத்திலேயே இறக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், தனது உடல்நிலை குறித்து வெளிப்படையான உண்மைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
உலகின் 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராக இருக்கும் அவரது உடல்நிலை அதிக ஆபத்தில் உள்ளதாக கருதுகிறார்.
1957-ஆம் ஆண்டில், 21 வயதில், அவர் கடுமையான Pleurisy நோயால் அவதிப்பட்டதாகவும் மற்றும் அவரது வலது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.