எனது பெயரை தேர்வு செய்ய AI உதவியது - புதிய போப் லியோ
தனது போப் பெயரை தேர்வு செய்ய AI உதவியதாக புதிய போப் லியோ தெரிவித்துள்ளார்.
புதிய போப்
கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, புதிய போப்பை தெரிவு செய்வதற்கான பணியில் கார்டினல்கள் ஈடுபட்டனர்.
இதன்படி, அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரிவோஸ்ட் என்பவர் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம், அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
போப் ஆக தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்களின் பெயரை மாற்றிக்கொள்வது வழக்கம். அதன்படி புதிய போப், ராபர்ட் பிரிவோஸ்ட் என்கிற தனது பெயரை, 'பதினான்காம் லியோ' என்று மாற்றியுள்ளார்.
போப் பெயரின் பின்னணியில் AI
போப் பதினான்காம் லியோ தனது முதல் உரையில், இந்த புதிய பெயரை தேர்வு செய்ய AI ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
1878 முதல் 1903 வரை கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பதிமூன்றாம் லியோவின் நினைவைப் போற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் போப் பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
ஆனால் முக்கியமாக போப் பதிமூன்றாம் லியோ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க என்சைக்கிள்கல் ரெரம் நோவாரம்(rerum novarum) என்ற புத்தகத்தில் முதல் பெரிய தொழில்துறை புரட்சியின் பின்னணியில் சமூகப் பிரச்சினையை உரையாற்றியது தான் காரணம்.
இன்று, மற்றொரு தொழில்துறை புரட்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, திருச்சபை தனது சமூகக் கற்பித்தல் என்ற பொக்கிஷத்தை அனைவருக்கும் வழங்குகிறது.
AI ஒரு பயனுள்ள கருவியாக இருந்தாலும், மனித கண்ணியம், நீதி மற்றும் உழைப்பைப் பாதுகாப்பதில் அது சவால்களை ஏற்படுத்துகிறது" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |