பிரபல நடிகை விஜயசாந்தி பாஜகவிலிருந்து திடீரென விலகல்.., காங்கிரஸில் இணைய திட்டமா?
இந்திய மாநிலமான தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகை விஜயசாந்தி பாஜகவிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
வாய்ப்பு மறுப்பு
119 தொகுதிகளை உள்ளடக்கிய தெலுங்கானாவில் நவம்பர் 30 -ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது.
இதில் 100 தொகுதிக்கான பாஜக வேட்பாளர்களை அக்கட்சி ஏற்கனவே அறிவித்த நிலையில், ஜனசேனாவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதில் தேர்தலில் போட்டியிட நடிகை விஜயசாந்திக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
பாஜகவில் விலகி காங்கிரசில் இணைய திட்டமா?
கடந்த 1997-ம் ஆண்டு பாஜகவில் நடிகை விஜயசாந்தி இணைந்தார். பின்னர், 2005 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து, சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சியில் இணைந்து 2009 -ம் ஆண்டு எம்.பி ஆனார். தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி 2014 -ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
இதன் பின், 2020 -ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை விஜயசாந்தி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை (நவ்.17) ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |