குடியுரிமை விதிகளை கடுமையாக்கியுள்ள ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் குடியுரிமை விதிகளை கடுமையாக்கியுள்ளது.
போர்ச்சுகல் நாடாளுமன்றம் குடியுரிமை பெறுவதற்கான வதிவிட காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
இதன் மூலம், ஐரோப்பிய பாஸ்போர்ட் பெறும் “fast track” முறையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு முன், சொத்து முதலீட்டின் மூலம் குடியிருப்பு அனுமதி வழங்கும் “Golden Visa” திட்டமும் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

புதிய மாற்றங்களின் முக்கிய அம்சங்கள்:
சொத்து முதலீட்டின் மூலம் குடியிருப்பு அனுமதி வழங்கும் நடைமுறை நிறைவு பெற்றது.
குடியுரிமைக்கான வதிவிட காலம் 10 ஆண்டுகளாக்கப்பட்டது.
வருமானம் (Income) மற்றும் குடியிருப்பு ஆதாரங்கள் (proof-of-residence) கடுமையாக பரிசீலிக்கப்படும்.
வெளிநாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு திட்டங்கள் மறுபரிசீலனையில் உள்ளது.
முதலீட்டாளர்களுக்கான Fast-track திட்டங்கள் நிறைவு பெற்றது.
இந்த மாற்றங்கள், ஐரோப்பாவில் முதலீட்டின் மூலம் குடியுரிமை பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால், பல முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் பிரான்ஸை நோக்கி திரும்பி வருகின்றனர்.
பிரான்ஸ், திறமை மற்றும் தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்தும் “French Tech Visa” திட்டத்தை வழங்குகிறது. இது 4 ஆண்டுகள் வரை செல்லும் குடியிருப்பு அனுமதியை வழங்குகிறது. தொழில்முனைவோர், IT நிபுணர்கள் மற்றும் புதுமை கொண்ட திட்டங்களை கொண்டவர்களுக்கு இது ஏற்றது. குடியுரிமை பெற 5 ஆண்டுகள் வதிவிட காலம் போதுமானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Portugal immigration rule changes 2025, Portugal citizenship residency 10 years, End of Golden Visa Portugal, France Tech Visa for entrepreneurs, EU migration policy shift, France vs Portugal immigration 2025, Talent-based visa programs Europe, Portugal real estate visa, ban France startup visa benefits, European citizenship by residency