ரூ.12,500 முதலீடு செய்தால் ரூ.40,00,000 கிடைக்கும்.., தபால் அலுவலக திட்டம்
பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் உள்ளது.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்த திட்டம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை, அதனால் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
ரூ.500 முதலீட்டில் கணக்கை தொடங்கி, ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
PPF திட்டத்தின் கால அவகாசம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த காலத்திற்கு முன் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியாது.
இருப்பினும், சில நிபந்தனைகளின் கீழ் பகுதி பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் வசதி உள்ளது.
உதாரணமாக, மாதம் ரூ.12,500 வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும்.
மேலும், 7.1 சதவீத வட்டியுடன் சுமார் ரூ.18.18 லட்சம் வட்டி கிடைக்கும். இதனால் முதிர்வின் போது ரூ.40.68 லட்சம் வரை பெற முடியும்.
கணக்கை தொடங்கி ஒரு நிதியாண்டு முடிந்த பிறகு கடன் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், கணக்கைத் தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிறிது தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |