மின்கம்பி அறுந்து விழுந்து பயங்கரம்: கொத்தாக பலியான பலர்
ஜனநாயக குடியரசு நாடான காங்கோவில், Kinshasa என்ற மார்க்கெட் பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததில் 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோவில் Matadi-Kibala என்ற மாவட்டத்தில் புதன்கிழமை அன்று வீடுகள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் Kinshasa என்ற மார்க்கெட் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தது. இதில் பல்வேறு நபர் சம்பவ இடத்திலே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எப்படி இந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தது என்று தெளிவாக தெரியவில்லை, ஆனால் மின்கம்பிகள் அறுந்து இன்று காலை பெய்த மழையில் தேங்கிய தண்ணிரில் விழுந்துள்ளது எனவும் இதில் 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் அரசு மக்கள் தொடர்பாளர் Charles Mbutamuntu தெரிவித்துள்ளார்.
இதில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் Kinshasa மார்க்கெட்டில் பணிபுரியும் பெண்கள் என அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.