நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த வீடுகள்! அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது
ஜப்பான் நிலச்சரிவில் அப்படியே முழுமையாக வீடுகள் மண்ணுக்குள் புதையும் காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.
டோக்கியோவிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் ஜப்பானின் மத்தியப் பகுதி நகரமான அட்டாமி நகரில் கடந்த வாரம் கனமழை பெய்தது.
இதனால் கடந்த சனியன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
100க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் மண்ணுக்குள் புதையும் காட்சிகள் வெளியாகி அதிரவைக்கின்றன.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking video: The moment a landslide occurred in Atami, Japan, leaving 20 people missing. pic.twitter.com/Kukq6ndvlh
— PM Breaking News (@PMBreakingNews) July 3, 2021