உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: யாரும் எதிர்பார்க்காத ஒரு நாடு முதலிடத்தில்
புதிதாக வெளியாகியுள்ள உலகின் சக்திவாய்ந்த கடுவுச்சீட்டுகள் பட்டியலின் முதலிடத்தில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு நாடு தெரிவாகியுள்ளது.
200 நாடுகளின் கடவுச்சீட்டுகள்
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்டுள்ள நாடாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவாகியுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறித்த ஆய்வை முன்னெடுத்துள்ள பிரபல நிறுவனமானது, ஐந்து காரணிகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 200 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் மதிப்பை வரிசைப்படுத்தியது.
@dailymail
விசா இல்லாத பயணத்தினால் கிடைக்கும் தன்மை, வெளிநாடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மீதான வரிவிதிப்பு, கருத்து, இரட்டை குடியுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவையை முக்கிய காரணிகளாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அனைத்து காரணிகளும் தற்போதைய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பொருந்துவதாக அந்த ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. விசா இல்லாத பயணம், வேகமாக வளரும் பொருளாதாரம், மட்டுமின்றி வருமான வரி ஏதும் இல்லை என்ற காரணிகளால் ஐக்கிய அமீரகத்தின் கடவுச்சீட்டானது சக்திவாய்ந்ததாக மாறுவதாக குரிப்பிட்டுள்ளனர்.
விசா இல்லாத பயணம்
குறித்த பட்டியலில் 30வது இடத்தில் பிரித்தானியாவும், 39வது இடத்தில் அவுஸ்திரேலியாவும், 43வது இடத்தில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய அமீரகத்தை பொறுத்தமட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 106 நாடுகளை விசா இல்லாத பயணம் மேற்கொள்ளும் பட்டியலில் இணைத்துள்ளது.
@getty
அது மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கு வரி விதிக்காத நாடு ஐக்கிய அமீரகம். இதனாலையே, பிரபலமானவர்கள் மற்றும் செல்வந்தர்கள் ஐக்கிய அமீரகத்தில் குடியேற ஆசைப்படுகின்றனர்.