நம்பர் 1 வீரரை முதல் முறையாக வீழ்த்திய தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா! குவியும் வாழ்த்துக்கள்
நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை முதல் முறையாக வீழ்த்தினார் தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.
நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நார்வேயின் கார்ல்சன் உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ளனர்.
வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோத வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் சுற்றில் சீனாவின் டிங் லிரேனிடம் தோல்வி கண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று நடந்த 3வது சுற்றில் நம்பர் 1 வீரரான கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. அபாரமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கிளாசிக்கல் முறையில் முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் 5.5 புள்ளிகள் பெற்று முதலிடத்திற்கு முன்னேறினார்.
இதே தொடரின் மகளிர் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |