ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்த பிரக்யான் ரோவர்
நிலவின் தென் துருவத்தில் பிரக்யான ரோவர் தனது ஆய்வு பணிகளை நிறைவு செய்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பணியை நிறைவு செய்த பிரக்யான் ரோவர்
கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகமாக தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கியது.
பிரக்யான் ரோவரானது 14 நாட்களுக்கு தனது ஆய்வு பணிகளை செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 2, 2023
The Rover completed its assignments.
It is now safely parked and set into Sleep mode.
APXS and LIBS payloads are turned off.
Data from these payloads is transmitted to the Earth via the Lander.
Currently, the battery is fully charged.
The solar panel is…
ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை தொடங்கும் என்ற நம்பிக்கையை இஸ்ரோ தெரிவித்துள்ளது, செப்டம்பர் 22 ம் திகதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
மீண்டும் எழுாமல்விட்டால் இந்தியாவின் நிலவு தூதுவனாக பிரக்யான் இருக்கும் எனவும் இஸ்ரோ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |