மோடி தெய்வ குழந்தை கிடையாது, டெஸ்ட் டியூப் பேசி- பிரகாஷ் ராஜ்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெய்வ குழந்தை கிடையாது, டெஸ்ட் டியூப் பேபி என கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
சென்னை தேனாம்பேட்டையில் நடந்த விருது வழங்கும் விழாவொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இப்படி விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது, இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்டு பேசுகையில், உடம்புக்கு காயமானால் நாங்கள் சும்மா இருந்தாலும் அது ஆறிடும், ஆனால் ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும்.
நான் என்றுமே மக்களின் குரல் தான், நான் இங்கு நிற்பதற்கும் மக்கள் தான் காரணம், 10 ஆண்டுகளாக மன்னரை எதிர்த்து கொண்டு இருக்கிறேன்.
இனி மன்னர் என்றுகூட சொல்ல முடியாது, அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார், தெய்வம் சோதிக்கிறது என்று தான் சொல்ல முடியும்.
தேரில் வரும் விமானத்தில் வரும் சர்வாதிகாரி, மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள், மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு என்ன தெரியும், எப்படி புரியும், அவர் தெய்வ குழந்தை கிடையாது, டெஸ்ட் டியூப் பேபி என கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.