அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற திருவாரூரில் பிரார்த்தனை! மொத்தமாக திரண்ட கிராம மக்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது பூர்வீக கிராமமான திருவாரூரில் உள்ள கிராம மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 -ம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில் அவர் திடீரென போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.
இதனால், துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் களமிறங்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இதில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், தமிழ்நாடு மாவட்டமான திருவாரூர் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்டவர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் வழிப் பேத்தி தான் கமலா ஹாரீஸ். இதனால் துளசேந்திரபுர கிராமமும் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
கிராம மக்கள் பிரார்த்தனை
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென துளசேந்திரபுர கிராம மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள பழமையான தர்ம சாஸ்தா கோவிலில் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான நட்புறவு மேம்படும் என்றும் இருநாடுகளிடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் உருவாகும் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |