12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொன்றதாக கர்ப்பிணிப்பெண் மீது குற்றச்சாட்டு
முன்னாள் காதலன் உட்பட 12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்துக் கொலை செய்ததாக தாய்லாந்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட கர்ப்பிணி
தாய்லாந்தின் தலைநகரான பாங்காகில், செவாய்க்கிழமையன்று, Sararat Rangsiwuthaporn (32) என்னும் கர்ப்பிணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், Sararatம் அவரது தோழியான Siriporn Khanwong என்னும் பெண்ணும், மதச்சடங்கு ஒன்றை நிறைவேற்றுவதற்காக நதி ஒன்றிற்குச் சென்றிருந்தார்கள். சிறிது நேரத்தில், Siriporn நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.
EPA
உடற்கூறு ஆய்வில், Siriporn உடலில் சயனைடு விஷம் இருந்தது தெரியவந்தது. அவரது மொபைல் போன், பணம் மற்றும் பைகள் காணாமல் போயிருந்தன.
விசாரணையில் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்கள்
Siriporn கடைசியாக Sararatஉடன் இருந்தது தெரியவந்ததால், Sararatஇடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டார்கள். அத்துடன், அவரது வீட்டில் சயனைடு போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில், Sararatதான் Siripornஐ கொலை செய்திருக்கலாம் என்றும், அவர் தனது முன்னாள் காதலர் உட்பட, மேலும் 11 பேரை இதேபோல கொலை செய்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த 11 பேர் கொல்லப்பட்டபோதும், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் இப்படி ஒரு பயங்கரம் நடந்திருக்கும் என சந்தேகப்படக்கூட இல்லை.
ஆக, பொலிசாரின் விசாரணையில், அவர்கள் அனைவரும் Sararatஆல் கொல்லப்பட்டது உறுதியானால், இது ஒரு சீரியல் கில்லர் கொலை சம்பவம் என முடிவு செய்யப்படும்.
உயிரிழந்த அனைவரின் உறவினர்களுமே, கொல்லப்பட்டவர்களிடமிருந்து நகை, பணம் போன்ற பொருட்கள் காணாமல் போயிருப்பதாக தெரிவித்துள்ளதால், Sararatஇன் நோக்கம் பணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Photo supplied/Wassayos Ngamkham