ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றை தடவிக்கொண்டிருந்த இளம்பெண்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
ட்ரம்ப் தடுப்பூசி கையெழுத்து நிகழ்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றும் புதிய நிர்வாக உத்தரவை அவரது அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அந்த காணொளி இணையத்தில் வெளியானது.
அதில், அவருக்கு பின்னால் நின்ற இளம் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றார்.
Claims she has a button fitted on her belly, and when she gets the nod that he’s asleep she moves her hand and presses a button that wakes him. They’re calling her The Zapper. No idea if it’s true but it *appears* to line up. pic.twitter.com/hgx4x6iQp6
— Tim Brannigan (@tim_brannigan) August 11, 2026
அந்த பெண்ணின் பெயர் ஜெய்மி லீக் பிராங்க்ளின் (Jayme Leagh Franklin). அவர் “The Conservateur” என்ற கன்சர்வேட்டிவ் மீடியா மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த பிராங்க்ளின்
நிகழ்ச்சியில் ட்ரம்ப் மற்றும் சுகாதார செயலாளர் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் அருகில் நின்றிருந்த பிராங்க்ளின், தனது வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த காட்சி வைரலானது.
சிலர், அவர் ட்ரம்புக்கு மின்சார ஷாக் கொடுத்ததாகவும், ரகசியமாக தனது வயிற்றில் ஒரு பொத்தானை அழுத்தியதாகவும் வதந்திகளை பரப்பினர்.
இதற்கு பதிலளித்த பிராங்க்ளின், சமூக வலைதளமான X-இல், “I’m just pregnant you weirdos” என்று பதிவிட்டு, அவர் கர்ப்பமாக இருந்ததால் தான் வயிற்றில் கையை வைத்து பார்த்துக்கொண்டு இருந்ததாக வெளிப்படையாக தெரிவித்தார்.
I’m just pregnant you weirdos 😂😭 https://t.co/NG3tYyJmXy
— Jayme Leagh Franklin (@jaymefranklin16) August 12, 2026

ஜெய்மி லீக் பிராங்க்ளின்
பிராங்க்ளின், 2020-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் 2019-இல் அமெரிக்க செனட்டில் சட்டமன்ற இன்டர்னாக பணியாற்றினார். பின்னர் ட்ரம்ப் 2020 தேர்தல் பிரசாரத்தில் coalitions coordinator ஆகவும், வெள்ளை மாளிகையில் correspondence director-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது நிறுவனம் “The Conservateur”, அரசியல், கலாசாரம், மதம், அழகு, பெண்மை போன்ற துறைகளில் கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான செய்தி மற்றும் கருத்துரைகளை வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு பெருமை என பிராங்க்ளின் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |