பயங்கர விபத்தில் சிக்கிய கர்ப்பிணிப்பெண்... வயிற்றிலிருந்த குழந்தைக்கு நிகழ்ந்த அற்புதம்!
இந்தியாவில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் பயங்கர விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழக்க, அதிசயிக்கும் விதமாக அவரது குழந்தை எந்த காயமுமின்றி வயிற்றிலிருந்து வெளியேறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஆக்ராவைச் சேர்ந்த காமினி (26) என்ற கர்ப்பிணிப்பெண், தனது கணவரான ராமுவுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக ராமு முயன்றபோது, அவரது இருசக்கர வாகனம் தடுமாறி வேகமாக வந்த ட்ரக் மீது மோத, கீழே விழுந்த காமினி மீது ட்ரக் ஏறியிறங்கியுள்ளது.
சம்பவ இடத்திலேயே காமினி துடிதுடித்து உயிரிழக்க, அவர் மீது ட்ரக் ஏறிய வேகத்தில் அவரது வயிற்றிலிருந்த குழந்தை வெளியே வந்திருக்கிறது.
Image: Jam Press/Rare Shot News
தொப்புள் கொடி மட்டும் அறுந்ததால் அந்தக் குழந்தையின் வயிற்றில் ஒரு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், மற்றபடி குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில் காமினி விபத்தில் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்ட அவரது மாமாவான காளிச்சரண் என்பவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். காளிச்சரண் ஏற்கனவே புற்றுநோயுடன் போராடிவந்தது குறிப்பிடத்தக்கது.