அடிவயிற்றில் எட்டி உதைத்த கணவர்! உயிரிழந்த கர்ப்பிணி பெண்... அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் கணவர் கால்களால் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் கரு கலைந்து மரணமடைந்துள்ளார்.
இரண்டாவது
விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன் (30). இவரது மனைவி பாரதி (23). பாரதி முதல் கணவரை பிரிந்த நிலையில் அவர் மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதையடுத்தே செல்பாண்டியனை மறுமணம் செய்தார். இந்த நிலையில், பாரதி தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. செல்வபாண்டியனுக்கு பாரதி நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் பாரதியின் கர்ப்பத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி தகராறு செய்ததுடன் கருவை கலைத்து விடும்படி செல்வபாண்டியன் கூறியுள்ளார்.
ஆனால் பாரதி கருவை கலைக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வபாண்டியன் பாரதியை கீழே தள்ளி அவரது அடிவயிற்றில் காலால் எட்டி உதைத்து கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதில் பாரதிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் செல்வபாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.