AI தொழில்நுட்பம் மூலம் வலம் வரும் கேப்டன் விஜயகாந்த்.., பிரேமலதா கூறிய முக்கிய விடயம்
திரைப்படங்களில் விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகர் விஜயகாந்தை கொண்டு வந்துள்ளனர்.
இதனை தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாவிடம் முறையான அனுமதியை பெற்று செய்துள்ளனர்.
ஆனால், சில படங்களில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதாக கேள்வி படுவதால் அதற்கான முறையான அனுமதியை பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக அறிக்கை
இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், "‘தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்! புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.
எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. இந்த மாதிரியான அறிவிப்புகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்தவிதமாக பயன்படுத்துவதாக இருந்தாலும் எங்களிடம் முன் அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுவரை அதுபோன்று யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அதனால், இதுபோன்ற அறிவிப்புகளை தவிர்த்து விடுங்கள்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |