விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு எதனால்? பிரேமலதா கூறும் விளக்கம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பொழுது, அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியபோது அதனை பிரேமலதா மறுத்து விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் கடந்த 11-ம் திகதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இதன்பின் சென்னையில் நடைபெற்ற தேமுதிகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு கேப்டன் விஜயகாந்த் கலந்துகொண்டு தேமுதிகவின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜய்காந்த் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரேமலதா பதிலளித்துள்ளார்.
பிரேமலதா கூறியதாவது..
'' அரசியலில் இருப்பதே சவால்தான் அதிலும் குறிப்பாக பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால். அதற்கு உதாரணம் ஜெயலலிதா.
அரசியல் இயக்கப் பணிகளில் விஜயகாந்த் உடன் தொடக்கத்தில் இருந்தே பயணித்து வருகிறேன். தொண்டர்கள் மீதான நம்பிக்கை உடன் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.
விஜயகாந்தால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் பிரிந்து சென்றது அவரது உடல்நிலை பின்னடைவுக்கு காரணம் ஆனது. விஜயகாந்தின் உத்தரவுப்படியே தே.மு.தி.க.வின் செயல்பாடுகள் எப்பொழுதும் இருக்கும்.
தொண்டர்களுக்காக நிச்சயமாக தே.மு.தி.க வெற்றி வியூகம் ஒன்றை மட்டுமே அமைப்போம். அதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
உட்கட்சி தேர்தல் முடிந்தவுடன் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற இருக்கிறது. அன்றைய கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வார். முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.
பொதுச் செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல'' என அவர் கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |