வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பிரேமலதா விஜயகாந்த்., கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்: வைரல் வீடியோ
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை தூத்துக்குடி சென்று தூத்துகுடி மாநகரம், உடன்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும், படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகிய பொருட்களையும் வழங்கினார்.
அப்பொழுது, பாதிக்கப்பட்ட ஒரு பெண் பிரேமலதா விஜயகாந்தை கட்டிப்பிடித்து, ''மழை வெள்ளத்தில் எல்லாமே போய்விட்டது'' என்று கதறி அழுதார்.
அதற்கு பிரேமலதா விஜகாந்த் ''உங்களுக்கு உதவி செய்யத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கோம். கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள்” என்று ஆறுதல் கூறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடியில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண். pic.twitter.com/1kFgRn9zah
— Kamadenu (@KamadenuTamil) December 21, 2023
திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவா் நேற்று பார்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
பின்னா், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம், வியாபாரிகளுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |