3 பில்லியன் பவுண்டுகள் செலவழித்து பிரீமியர் கிளப்கள் சாதனை! முதலிடத்தில் இங்கிலாந்தின் எந்த அணி?
2025-26 கோடை காலக் கட்டத்தில் பிரீமியர் லீக் கிளப் அணிகள் பரிமாற்றத்தில் சாதனை படைத்துள்ளன.
பிரீமியர் லீக் கிளப்கள்
பிபிசி ஸ்போர்ட் பிரீமியர் லீக் கிளப் அணிகளின் மொத்த செலவை 3.087 பில்லியன் பவுண்டாக மதிப்பிட்டுள்ளது.
இது 2023ஆம் ஆண்டு கோடையில் இருந்த முந்தைய பிரிவு சாதனையான 2.36 பில்லியனை விட கணிசமான அளவு அதிகம் என்பதால், புதிய சாதனையை பிரீமியர் லீக் கிளப்கள் படைத்துள்ளன.
இவற்றில் லிவர்பூல் (Liverpool) அணி 400 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக செலவழித்து, இங்கிலாந்தின் முன்னணி அணிகளில் முதலிடத்தில் உள்ளது.
200 மில்லியன்
இந்திய மதிப்பில் ரூ.5000 கோடியை லிவர்பூல் அணி 6 வீரர்களை வாங்கவும், ஆர்செனல் அணி 7 வீரர்களை வாங்க ரூ.2,600 கோடியும் செலவிட்டுள்ளன.
அதேபோல் செல்சியா (Chelsea), மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) மற்றும் நியூகேஸில் (Newcastle) 200 மில்லியன் பவுண்டுக்கு மேல் செலவிட்டுள்ளன.
பிரீமியர் லீக்கின் மிகவும் விலையுயர்ந்த பரிமாற்றங்கள்
- 2025 கோடை - 3.08 பில்லியன் பவுண்டுகள்
- 2023 கோடை - 2.36 பில்லியன் பவுண்டுகள்
- 2024 கோடை - 2.08 பில்லியன் பவுண்டுகள்
- 2022 கோடை - 1.92 பில்லியன் பவுண்டுகள்
- 2017 கோடை - 1.43 பில்லியன் பவுண்டுகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |