தாலீபான்கள் வந்துவிட்டதால்... நாட்டை விட்டு வெளியேறிய ஜானதிபதி! வெளிவரும் முக்கிய தகவல்
தாலீபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர்.
முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து, இன்று தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர்.
நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, சமாதான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது இந்நிலையில், காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றினர்.
தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தாலீபான்கள் நிபந்தனையற்ற அதிகாரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க முயன்றதால், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி Ashraf Ghani நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இருக்கும் இடம் இதுவரை தெரியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.