ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நேரத்திலும் இந்த அறிவிப்பு வெளியாகலாம்! தாலிபான்கள் பிடியில் காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் எந்த நேரத்திலும் தாலிபான்கள் வசமாகலாம் என்ற சூழலில் அதிகார கைமாற்றத்திற்கு ஜனாதிபதி கானி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தற்போதைய ஆப்கான் உள்விவகார அமைச்சர் அப்துல் சத்தார் மிர்சாக்வால் அறிவித்துள்ளார். மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் இடைநிலை அரசாங்கங்கத்திற்கு அதிகார கைமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய ராணுவ துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில், திடீரென்று தாலிபான் தீவிரவாதிகள் கை ஓங்கியுள்ளது.
சமீப நாட்களாக கடும் தாக்குதலை முன்னெடுத்த தாலிபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானின பல்வேறு மாகாண தலைநகரங்களை ஒன்றின் பின் ஒன்றாக கைப்பற்றி வந்தனர்.
இந்த நிலையில், தலைநகர் காபூல் இன்னும் சில தினங்களில் தாலிபான்களால் கைப்பற்ற கூடும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற தொடங்கினர்.
மட்டுமின்றி, தாலிபான்கள் காபூலின் முக்கிய பகுதி ஒன்றையும் கைப்பற்றி, தலைநகரை கைப்பற்ற ஆயத்தமாகி வந்தனர். ஆனால் கட்டாயப்படுத்தி தாங்கள் தலைநகரை கைப்பற்ற மாட்டோம் என தாலிபான்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதிகார கைமாற்றத்திற்கு ஜனாதிபதி கானி முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் எந்த நேரத்திலும் ஜனாதிபதி கானி பதவி விலகலாம் எனவும், அமைதியான முறையில் அதிகார கைமாற்றம் நடைபெறும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இனி முதல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள தங்களால் முடியாது என தாலிபான்கள் அறிவித்துள்ளதுடன்,
ஜனாதிபதி அஷ்ரஃப் கானி உட்பட முக்கிய தலைவர்கள் பாதுகாப்பாக வெளியேற ஆவன செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.