அரிசிக்கு விலை வரம்பு விதித்த இன்னொரு ஆசிய நாடு: ஜனாதிபதி விளக்கம்
பதுக்கல்காரர்களால் உணவு பண்டங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, அரிசிக்கு விலை வரம்பு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதிகபட்ச சில்லறை விலை
சட்டவிரோத குழுக்கள் மற்றும் பதுக்கல்காரர்களே நாட்டில் உணவுக் கட்டணத்தை உயர்த்துவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
@getty
இதனையடுத்து பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் நுகரும் உமி மற்றும் தவிடு நீக்கப்பட்ட அரிசி கிலோவுக்கு அதிகபட்ச சில்லறை விலையாக (php 41) 59.72 ரூபாய் எனவும் உயர் தர அரிசி கிலோவுக்கு (php 45) 65.55 எனவும் விலை வரம்பு விதித்துள்ளார்.
இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 110 மில்லியன் மக்கள் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டில் அரிசி அடிப்படை உணவாக பாவிக்கப்படுகிறது.
ஆனால் போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாத நிலையில், தங்களுக்கு தேவையான தானியத்தை இறக்குமதி செய்யும் உலகின் முதன்மையான இறக்குமதியாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
பாதிப்படைய செய்துள்ளது
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சிறப்பு உத்தரவை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மார்கோஸ், அரிசியின் சில்லறை விலைகளின் தற்போதைய உயர்வு பிலிப்பைன்ஸ் மீது கணிசமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதிப்படைய செய்துள்ளது என்றார்.
@ap
இந்திய அரசாங்கத்தின் திடீர் ஏற்றுமதி தடை, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, நிலையற்ற உலக எண்ணெய் விலை ஆகியவை அடிப்படை தேவைகளின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் ஜனாதிபதி மார்கோஸ் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |