ட்ரம்ப் விதித்த தடையால்... சம்பளத்திற்கு திண்டாடும் நாடொன்றின் ஜனாதிபதி
அமெரிக்கத் தடைகளால் பாதிக்கப்பட்ட கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தனது சம்பளத்தைப் பெற முடியாமல் தவித்து வருகிறார்.
கருப்புப் பட்டியலில்
குறித்த தகவலை அவரது சட்டத்தரணியே செய்தி நிறுவனம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார். பெட்ரோ, அவரது மனைவி, மகன்களில் ஒருவர் மற்றும் உள்விவகார அமைச்சர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன்,

சமீபத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அமெரிக்க கருவூலத்தின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஜனாதிபதி பெட்ரோ நடவடிக்கை எடுக்கத் தவறியதாக வெள்ளை மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், ட்ரம்பால் தடைவிதிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் பெட்ரோவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் வணிகம் செய்வதையும் தடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, அரசாங்கத்தின் சம்பளத்தைப் பெறவும் சிக்கலாக உள்ளது என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை நாட
அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிபொருள் நிறுவனம் ஒன்று ஸ்பெயினில் ஜனாதிபதி விமானத்திற்கு எரிபொருள் நிரப்பவும் மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பலனைத் தரலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், தடைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோ தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் போதைப்பொருள் குழுக்களுக்கு எதிராக போராடியவர் என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி, ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கைகளை எதிர்ப்பதாலையே பெட்ரோ தண்டிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        