மரண பயத்துடனேயே வாழும் ரஷ்ய அதிபர் புடின்: திரும்ப திரும்ப ஒரு வீடியோவையே பார்த்துக்கொண்டிருக்கிறாராம்!
மரண பயத்துடனேயே வாழும் ரஷ்ய அதிபர் புடின், லிபியாவின் தலைவரான முகமது கடாபி கொல்லப்பட்ட வீடியோவையே பித்துப்பிடித்ததுபோல மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.
எதிர்க்கட்சி தலைவரான Alexi Navalny கைது காரணமாக நாடே கொந்தளித்துக்கொண்டிருப்பதால், முகமது கடாபியைப் போலவே தானும் கொல்லப்படலாம் என அஞ்சுகிறாராம் புடின்.
ரஷ்ய வரலாற்றாளரான Yuri Felshtinsky என்பவர் கூறும்போது, தற்போது நாட்டில் நிலவும் எதிர்ப்பு பேராட்டங்களைப் பார்க்கும்போது, மேலும் அடக்குமுறையை பிரயோகிக்கவேண்டும் என்ற முடிவுக்கே புடின் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளாக ரஷ்யாவை ஆண்டுவரும் புடின், ஒருவேளை பதவி போய்விட்டால், தனது முடிவு மோசமானதாக இருக்கும் என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கும், லிபிய தலைவரான முகமது கடாபிக்கு ஏற்பட்ட முடிவே ஏற்படலாம் என அஞ்சுகிறாராம் புடின்.
2011ஆம் ஆண்டு, லிபிய தலைவரான முகமது கடாபி போராட்டக்காரர்களுக்கு தப்பி சாக்கடை ஒன்றிற்குள் பதுங்கியிருந்தபோது, பிடிபட்டு சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


