ஸ்டாலின் வழியை பின்பற்றும் சீன ஜனாதிபதி... மாயமான அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை
ரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் போன்று எதிர்ப்பவர்களை மொத்தமாக களையெடுக்கும் நடவடிக்கைகளை சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் தற்போது பின்பற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியே கசியாமல் இருக்க
சமீப மாதங்களில் சீனாவின் நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் திடீரென்று மாயமாகியுள்ளதில் சந்தேகம் வலுத்துள்ளது. மட்டுமின்றி, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Qin Gang திடீரென்று மொத்த பொறுப்புகளில் இருந்தும் வெளியேற்றப்பட்ட நிலையில்,
@afp
அவர் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Li Shangfu உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பலர் பல மாதங்களாக மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், பலர் மர்ம மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சீனாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயர்மட்ட அதிகாரிகளும் முன்னாள் அமைச்சர்களும் திடீரென்று மாயமாகி வரும் நிலையில், ஜனாதிபதி ஜி ஜின்பிங் உண்மையிலேயே காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என முக்கிய பொறுப்புகளில் இருந்த இருவரையும் எந்த காரணங்களும் குறிப்பிடாமல் நீக்கியுள்ளதும், அவர்கள் இருவரும் மாயமாகியுள்ளதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
களையெடுக்கும் நடவடிக்கை
2021 ஜூலை மாதம் அமெரிக்காவுக்கான தூதராக Qin Gang நியமிக்கப்பட்டார். அதனையடுத்து வெறும் 18 மாதங்களுக்கு பின்னர் சீனாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
@epa
ஆனால் பொறுப்புக்கு வந்த 6 மாதங்களில் Qin Gang தற்போது மாயமாகியுள்ளார். கடைசியாக ஜூன் 25ம் திகதி இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்துள்ளார்.
கடந்த 2012ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜி ஜின்பிங், அதன் பின்னர் தமக்கு எதிராக செயல்படும் அனைவரையும் களையெடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்.
மட்டுமின்றி, மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மூத்த அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது மர்மமான முறையில் தற்கொலை செய்துள்ளனர்.
இதனாலையே, ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் போன்று, தம்மை எதிர்ப்பவர்களை மொத்தமாக களையெடுக்கும் நடவடிக்கைகளை ஜி ஜின்பிங் முன்னெடுத்து வருவதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |